(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
அத்துடன் இப்போதுள்ள நிலையில் 92 ரக பெட்ரோல் பத்து நாட்களுக்கும், 95 ரக பெட்ரோல் நாற்பது நாட்களுக்கும், டீசல் எட்டு நாட்களுக்கும், சூப்பர் டீசல் எட்டு நாட்களுக்குமே கைவசம் உள்ளது. எனினும் எதிர்காலத்தில் எரிபொருள் கிடைக்கும். மேலும் ஆறு நாட்களுக்கு தேவையான டீசல் இப்போதும் இறக்குமதி செய்யப்படுகின்றது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 1285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்றது.
எனினும் அடுத்த ஆறுமாத காலத்திற்கான தேவை குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இதில் 500 மில்லியன் டொலர்களை இந்திய நிதி உதவியில் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ளோம். ஏனைய நிதியை பெற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டுள்ளோம். அதற்காக பல தரப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று எரிபொருள் தட்டுப்பாடு நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM