மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு கல்முனை பிதான வீதி ஓரத்தில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் நேற்று(23) மாலை மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஓந்தாச்சிமடம் 80 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தெய்வநாயகம் கணபதிப்பிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீவராணியின் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி, சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM