1000 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை சாதாரணமாகக் கருத வேண்டாம் - சுகாதார சேவைகள் 

24 Feb, 2022 | 01:36 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் சுமார் 1000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை சாதாரணமாகக் கருத முடியாது. 

இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் காரணமாகவுள்ளது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை 23 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் தனியார்துறையினர் கிடைக்கும் முடிவுகள் தொடர்பான பிரதேச மருத்துவ அதிகாரி பிரிவில் கையளிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். 

அவ்வாறில்லை எனில் அது குற்றமாகவே கருதப்படும்.

காரணம் ஒமிக்ரோனின் இயல்பிற்கமைய தற்போது அறிகுறியற்ற அல்லது மிகக்குறைவான அறிகுறிகளுடைய தொற்றாளர்கள் சமூகத்தில் உள்ளனர். 

நாட்டில் நாளாந்தம் அறிவிக்கப்படும் தொற்றாளர்களை விட பன்மடங்கு அதிக தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும்.

நாளாந்தம் சுமார் 1000 தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை சாதாரணமாகக் கருத முடியாது. 

இவ்வாறு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமையே மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் காரணமாகவுள்ளது.

உடல் ஆரோக்கியமாகவுள்ள , ஆனால் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களால் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானோர் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர்.

எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right