பாராளுமன்ற நூலகத்தில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை - சபாநாயகர் அறிவிப்பு

Published By: Digital Desk 3

24 Feb, 2022 | 11:43 AM
image

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்கள் அடங்கிய (87) தொகுப்புகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக பாராளுமன்ற நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அந்த ஆணைக்குழுவின் சாட்சியங்கள் அடங்கிய 87 தொகுதிகள் 2022.02.22 ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்டவை என்றும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபையின் விசேட அனுமதியுடன் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் 2021.02.25 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் அறிவித்தார். 

இதேவேளை, பொலன்னறுவை தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ரொஷான் ரணசிங்க சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணை சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இன்று பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.

அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அமைச்சர்  ஜோன்ஸ்டன் பர்னாந்து இதனை வழிமொழிந்தார். பாராளுமன்றம் இன்று மு.ப. 10.00 மணிக்கு கூடியதுடன், மு.ப. 11.00 மணி முதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

அதனை அடுத்து பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது 2003 ஆம் ஆண்டு 36 ஆம் இலக்க புலமைச் சொத்து சட்டத்தை திருத்துவதற்கு புலமைச் சொத்து (திருத்தம்) சட்டமூலம் சபை முதல்வரும் அமைச்சருமா தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டது. 

சட்டமூலத்தை கீழே உள்ள இணைப்பில் பார்வையிடவும் http://documents.gov.lk/files/bill/2022/2/181-2022_T.pdf அதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்ததுடன் பி.ப. 5.20 வரை இடம்பெற்ற விவாதத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் உரையாற்றினர். 

அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் கூட்டநடப்பெண் குறித்து கேள்வியெழுப்பியதுடன், போதிய கூட்ட நடப்பெண் இல்லாமையால் பாராளுமன்றம் இன்று (24) காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57