தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு பெண் பலி

By Vishnu

24 Feb, 2022 | 09:52 AM
image

ரிதிமக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகி மவத்தை, தேவால சந்தி பகுதியில் பெண்ணொருவர் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மகள் மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விபத்தினை ஏற்படுத்திய சந்தேக நபருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு, பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ரிதிகம தேவாலா சந்தி பகுதியில் வசிக்கும் 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

உயிரழந்தவரின் சடலம் ரிதிகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்படடுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right