பெருந்தோட்ட மக்களுக்கான சம்பளத்தை 2000 ரூபா வரை வழங்க வேண்டும் - விஜித்த ஹேரத் 

23 Feb, 2022 | 02:51 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கத்தால் பொருட்களில் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் அல்ல இரண்டாயிரம் ரூபாவையாவது வழங்க வேண்டும். 

அத்துடன் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியால் நாட்டில் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அப்படியானால் அரசாங்கம் முன்மாதிரியாக அரசாங்கத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்களுக்காவது இதனை வழங்கி இருக்கவேண்டும்.

இப்போது அனைத்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரொட்டியும், பருப்பும் சாப்பிட முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலைமையில் ஆயிரம் அல்ல இரண்டாயிரம் ரூபாவையாவது வழங்க வேண்டும், ஆகக் குறைந்த சம்பள சட்டத்தை கொண்டு வந்திருந்தால் ஆயிரம் ரூபாவை வழங்கியிருக்கலாம். 

ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. மாறாக சாப்பு கடை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து ஆயிரம் ரூபா பம்பளம் அதிகரிக்க முற்பட்டதால் கம்பனிகள் நீதிமன்றம் சென்றன. 

மேலும் தேயிலை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்து 5000 மில்லியன் டொலர் லாபமீட்டவுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். 

ஆனால் கடந்த காலங்களில் அரசாங்கம் தரமான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

அத்துடன் ஒரு அரிசியையேனும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றே விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார். 

ஆனால் இப்போது 35 கோடி கிலோ அரிசியை கடந்த மூன்று மாதத்தில் கொண்டுவந்துள்ளனர். இதனால் நாட்டில் இருக்கும் சிறிய அரிசி ஆலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இதேவேளை தற்போது நாட்டில் பெரிய பிரச்சினையாக எரிபொருள் உள்ளது. 

கடலில் மூன்று நாட்களாக கப்பல் இருந்தாலும் அதில் இருந்து எரிபொருளை இறக்க டொலர் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது. 

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியால் அனைத்து தொழிற்துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.  அரசாங்கத்தின் இயலாமையே இதற்கு காரணமாகும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனத் தூதுவரின் இல்லத்தில் ரணிலுக்கு இராப்போசனம்

2025-03-23 09:13:17
news-image

பிரதமர் மோடியின் விஜயத்திற்கு முன்னர் அமெரிக்கா...

2025-03-23 09:12:36
news-image

இன்றைய வானிலை

2025-03-23 06:35:51
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில்...

2025-03-23 01:05:33
news-image

வரவு - செலவு திட்டத்தால் மக்கள்...

2025-03-22 16:33:50
news-image

காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் வெளியிட்டது கண்டன...

2025-03-22 22:04:04
news-image

நாட்டுக்கு ஆபத்தென்றால் ரணில் உதவுவார் -...

2025-03-22 16:32:49
news-image

கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து கேரோயின் மற்றும் ஐஸ்...

2025-03-22 21:02:50
news-image

அரச சேவைகளில் அமைச்சர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு...

2025-03-22 16:30:53
news-image

இலங்கையை பொறுப்புக்கூறச் செய்வதற்கு உயர் வழிமுறைகளை...

2025-03-22 19:39:55
news-image

காசாவில் நிலைமை மோசம் - இலங்கை...

2025-03-22 16:31:19
news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51