மகாவலி அதிகாரசபைக்கு எதிராக அணிதிரளும் தமிழ் எம்.பி.க்கள் ; நாளை போராட்டம்

Published By: Digital Desk 3

23 Feb, 2022 | 03:10 PM
image

(ஆர்.ராம்)

மகாவலி அதிகார சபையின் அதிகார எல்லையினுள் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்படுத்துதல் என்ற தொனியில் அதிகாரங்களை முழுமையாக கையிலெடுப்பதற்கு தயாராகியுள்ள மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டிற்கு எதிராக நாளை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அரசியல் கூட்டணிகள், கட்சிகளின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

முன்னதாக, மகாவலி அதிகார சபையின் அதிகார எல்லையினுள் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்படுத்துதல் தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சரும், அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரும், மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபகஷ தலைமையில் நேற்றையதினம் விசேட கலந்துரையாடலொன்றுக்காக எட்டு மாவட்ட செயலாளர்களுக்கு அவசர அழைப்பொன்று விடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, பதுளை, நுவரெலியா, ஆகிய எட்டு மாவட்டங்களின் செயலாளர்களுக்கே மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இக்கலந்துரையாடலின் போது 1979ஆம் ஆண்டின் 23ஆம் இலக்கத்தினை உடைய இலங்கை மகாவலி அதிகாரசபை சட்டத்தின் அதிகாரத்திற்கு அமைவாக, ‘மகாவலி விசேட அதிகார எல்லையாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தினுள் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு அதிகார எல்லையை சரியாக இனங்காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இறுதி நேரத்தில் இக்கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டதாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 

திணைக்களத் தலைவர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுக்கு நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் காரணமாக இக்கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாவலி அதிகார சபை தனது எல்லையினுள் சகல அதிகாரங்களையும் உள்ளீர்ப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளையதினம் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

அத்துடன், இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றபோது, ஜனாதிபதி தரப்பிலிருந்து பேச்சுநடத்துவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்படுமாயின் அச்சமயத்தில் மகஜரொன்றையும் கையளிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42