வட்டவளையில் சிறுவன் துஷ்பிரயோகம் - பிக்கு விளக்கமறியலில்

By T Yuwaraj

23 Feb, 2022 | 02:21 PM
image

வட்டவளை டெம்பல்ஸ்டோவ் தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரையின் பிக்குவை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதிபதி அசங்க ஹெட்டிவத்த இன்று (23.02.2022) உத்தரவிட்டார்.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : வைத்தியருக்கு விளக்கமறியல் நீடிப்பு |  Virakesari.lk

குறித்த விகாரையில் இந்த சம்பவம் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், 21ஆம் திகதி குறித்த சிறுவனின் தந்தை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்ததாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, 21ஆம் திகதி மாலை வட்டவளை பொலிஸாரால் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அதனையடுத்து, 22ஆம் திகதி மேற்படி சிறுவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், பிக்குவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறித்த தோட்டத்தில் பொது மக்களால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் 23.02.2022 பொலிஸாரால் பிக்கு அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி குறித்த பிக்குவை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right