ஜெனிவா கூட்டத்தொடரை இலக்குவைத்து எதிர்க்கட்சி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது - அமைச்சர் வீரசேகர

Published By: Digital Desk 3

23 Feb, 2022 | 02:07 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜெனிவா விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சியின் நகர்வுகள் காணப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். 

யுத்த குற்றச்சாட்டுகள் பொய்யென சர்வதேச நிபுணர்கள் தெரிவித்தும் நல்லாட்சி அரசாங்கம் அதனை நிராகரித்து யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கியது எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, 27/2 இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்தும் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதில் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில்,

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து பொலிஸாருக்கு கிடைக்கும் சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு வழங்கப்படும் முறைப்பாடுகள் பாரதூரமானது என்றால் அது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவித்து அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும். 

அதேபோல் விசாரணைகளில் கிடைக்கும் சகல தரவுகளையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேபோல் அண்மையில் சமுதித்த என்ற ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்டுள்ளது. ஆனால் உடல் ரீதியில் எந்தவித சித்திரவதைக்கும் உற்படுத்தப்படவில்லை.  எனினும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மேலதிகமாக முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அதேபோல் அவரது வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்தும் புலனாய்வுத்துறை மூலமாக ஆராயப்பட்டுவருகின்றது.

அதேபோல் குற்றப்புலனாய்வு பிரிவு, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற மறைமுக சக்திகளை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதனை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம்.  ஜெனிவா மனித உரிமைகள் பேரவையை இலக்கு வைத்து முன்வைக்கும் மோசமான கருத்துக்களாகவே இதனை கருதுகின்றோம். 

இது குறித்து நாம் கவலையடைகின்றோம்.  யுத்த குற்றச்சாட்டு குறித்த விசேட நிபுணர்களான டெஸ்மன் டி சில்வா, ஜெப்ரி நைஸ், மைக்கல் கிரேக், மைகள் நியூட்டன், ஜோன் ஹோம்ஸ், ரொபின் நிக்சன் ஆகிய ஆறுபேர் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெறவில்லை என கூறியிருந்த போதும் நல்லாட்சி அரசாங்கமே ஜெனிவாவில் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி யுத்த குற்றம் இடம்பெற்றதாக ஏற்றுக்கொண்டனர். 

எனவே இப்போதும் ஜெனிவா விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே நகர்த்தப்படுகின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இனியாவது நாட்டை காட்டிக்கொண்டிருக்கும் விதமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டு மாதங்களுக்குள் உப்பூறல் கிராமத்தில் ஆறு...

2026-01-24 17:56:18
news-image

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில்...

2026-01-24 17:07:31
news-image

தெற்கு கடலில் 270 கிலோ போதைப்பொருளுடன்...

2026-01-24 17:02:47
news-image

போதைப்பொருள் பாவனை செய்யும் 480 வாகன...

2026-01-24 16:37:38
news-image

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய...

2026-01-24 16:10:32
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும்...

2026-01-24 15:53:03
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் அதிரடி: ஒரே...

2026-01-24 15:33:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய இருவர் கைது!

2026-01-24 11:56:34
news-image

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின்...

2026-01-24 15:17:07
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தில்!

2026-01-24 15:01:30
news-image

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2026-01-24 15:00:31
news-image

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த...

2026-01-24 14:16:03