(நா.தனுஜா)
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தின் கணிப்பீட்டின் பிரகாரம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், கடந்த ஜனவரி மாதம் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக கடந்த ஜனவரி மாதம் மதிப்பிடப்பட்ட பணவீக்கத்திற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு 11.4 சதவீதமும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு 5.4 சதவீதமுமான பங்களிப்பை வழங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம், எனவே ஜனவரி மாதம் பணவீக்கமானது 3.7 சதவீதத்தினால் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் பணவீக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் கடந்த ஜனவரியில் உணவுப்பொருட்களின் ஆண்டுக்கான பணவீக்கம் 24.4 சதவீதமாகவும் உணவல்லாப்பொருட்களின் ஆண்டுக்கான பணவீக்கம் 10.2 சதவீதமாகவும் உயர்வடைந்திருப்பதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மாதாந்தம் ஏற்படக்கூடிய மாற்றங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் 161.0 ஆகக் காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண், இவ்வருடம் ஜனவரி மாதம் 166.0 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை கடந்த மாதம் அரிசி, பால்மா, பழங்கள், மீன், கோதுமைமா, பாண், மரக்கறிகள், தேங்காய் எண்ணெய், இறைச்சி, மிளகாய்தூள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், மைசூர் பருப்பு, தேங்காய், உருளைக்கிழங்கு, சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகிய உணவுப்பொருட்களினதும் மதுபானவகைகள், சிகரெட், ஆடையுற்பத்திகள், எரிவாயு, எரிபொருள், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட உணவல்லாப்பொருட்களினதும் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM