சீமெந்து தட்டுப்பாட்டை நீக்க விரைவில் நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த

By Vishnu

23 Feb, 2022 | 12:40 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் கடந்த காலங்களில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வந்தது. என்றாலும் தற்போது அந்த நிலைமை குறைவடைந்துள்ளது. அதேபோன்று சீமெந்தது மற்றும் பால்மாவுக்கு இருக்கும் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்போம் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹண பண்டார, நாட்டில் எரிபொருள் மற்றும் சீமெந்திக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சீமெந்தி மூடை கறுப்பு சந்தையில் பாரிய விலை அதிகரிப்புக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே இராஜங்கா அமைச்சர் மேற்கண்ட தகவலை கூறினார்.

அத்துடன் அம்பாந்தோட்டையில் சீமெந்து தொழிற்சாலை அடுத்த மாதம் 7ஆ ம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது. அதன் பிறகு அங்கிருந்து மாதத்துக்கு 3 மில்லியன் மூடை சீமெந்து சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44