1000 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் - வடிவேல் சுரேஷ் 

24 Feb, 2022 | 10:32 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஆயிரம் ரூபாய் சம்பள நாடகம் நாளை 24 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருகிறது. 

அப்போது இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து அந்த மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இல்லாவிட்டால் இந்த வழக்கை தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்தால் அது பெருந்தோட்ட மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழழமை (22) இடம்பெற்ற விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர்  தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது,அதனால்  தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான தொகை வழங்கப்பட வேண்டும். 

இவ்வாறான நிலையில் ஆயிரம் ரூபாய் விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று அதனை இழுத்தடிப்புச் செய்கிறார்கள். 

அப்போது பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன, தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இணைந்து வழக்கை நிறைவுக்குக் கொண்டுவர வேண்டும்.  

இன்றைய வாழ்க்கை செலவுக்கு ஏற்ப சம்பள சபையின் ஊடாக 2500 ரூபா தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தன்  நாட்டில் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் . 

அத்துடன் நாடு கஷ்டத்தில் விழும்போதெல்லாம் இந்திய அரசாங்கமே உதவிகளை வழங்குகிறது, இந்த உதவிகளை ஏற்றுக்கொள்ளும் இலங்கை அரசாங்கம், இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களை மாத்திரம் ஏன் வஞ்சிக்கிறது. 

பெருந்தோட்டக் கம்பனிகள் மனிதர்களால் செய்ய முடியாத வேலைகளைக்கூட தொழிலாளர்களுக்கு வழங்குகிறது. தொழிலாளர்கள் இயந்திரங்கள் அல்ல அவர்கள் மனிதர்கள். 

மலையக மக்களை வஞ்சித்து சிலோன் தேயிலை உற்பத்தி செய்வது என்ன நியாயம்? 

இது மனித உரிமை மீறல். அதனால் பெருந்தோட்டங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை நிறுத்த அரசாங்கம் முன்வரவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் 8 அடி லயத்தில் சென்று வசித்தால் இந்த சிரமம் புரியும். 

பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகளால் 22 கிலோ தேயிலை பறிக்க முடியுமா? 350 இறப்பர் மரங்களில் பால் எடுக்க முடியுமா? என கேட்கின்றேன். 

அதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு இடம்பெற்றுவரும் அநீதி தொடர்பில் முழு பாராளுமன்றமும் வெட்கித் தலைகுனியவேண்டும். அபிவிருத்தி என்ற பெயரில் அவர்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. 

மலையக மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக...

2025-01-14 19:39:54
news-image

நாளொன்றுக்கு 2500 கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை...

2025-01-14 19:55:32
news-image

எமது ஆட்சியை மீள திருப்புவதற்கு எந்த...

2025-01-14 21:47:39
news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03