முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய பிறப்பித்துள்ளார்.

பாலித பெர்னாண்டோ எதிர்வரும் ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதிவரை  கட்டார் செல்வதற்கு நீதிமன்ற உத்தரவை கோரியிருந்த நிலையில், இன்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5 மில்லியன் பெறுமதியான இரண்டு மேலதிக சரீர பிணையில் வெளிநாடு செல்ல அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவன்கார்ட் விசாரணை தொடர்பில் பாலித பெர்னாண்டோ மற்றும் நிசாங்க சேனாதிபதி ஆகியோருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.