கமல் லியனாரச்சியின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் - இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்

Published By: Digital Desk 4

23 Feb, 2022 | 07:11 AM
image

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கமல் லியனாரச்சியின் மறைவு சிங்கள மொழிமூல ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது இலங்கை திருநாட்டின் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும். 

ஊடகத்துறையில் அவரது பங்களிப்பு ஊடகவியலாளராக, ஊடக வளவாலராக, ஊடக அவதானியாக, ஊடக சமூகத்துடனான நண்பராக என்று பல்வேறு துறைகளிலும் இருந்து வந்தது என்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

2022 பெப்ரவரி 20 ஆம் திகதி பயாகலையில் திடீர் மாரடைப்பு காரணமாக காலம் சென்ற கமல் லியனாரச்சி அவரது மரணம் வரையில், ஊடகத்துறைக்கான அயராத பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்.

கமல் லியனாரச்சி யுக்திய பத்திரிகை மூலம் ஊடக தொழிலை ஆரம்பித்து பின்னர் லக்பிம பத்திரிகையில் நீண்ட காலமாக ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாட்டு பொறுப்பதிகாரியாக சிங்கள மொழி மூல முறைப்பாடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அவர் சிறிது காலம் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். 

கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் கூட அலுவலகம் வந்த பணியாற்றிய அவரின் இழப்பு சிங்கள மொழி ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாததாகும்.

அவர் இந்த ஊடக பணியை முன்னெடுத்த இவ்வளவு காலமும் எந்த சந்தர்ப்பத்திலும் இன, மத, மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை. அனைத்து பேதங்களுக்கு அப்பால் இருந்து சேவையாற்றிய ஒருவராவதோடு ஊடக சுதந்திரம், ஊடகங்களில் வெளிவரும் போலி செய்திகளால் சமூகத்தில் இனங்களுக்கும் மத ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புக்களுக்கு எதிராகவும் போராடிய ஒருவராவதோடு ஊடகவியலாளர்கள் ஊடக பணியை செய்கின்ற போது ஊடக ஒழுக்கக்கோவையை பின்பற்றியவர்களாக சமூகப் பொறுப்புணர்வோடு ஊடக தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற இலட்சியத்தில் பாடுபட்ட ஒருவராவார்.

அவர் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் ஒரு அதிகாரியாக கடமையாற்றிய போதும் ஊடகத்துறைக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படும்போதெல்லாம் நாட்டில் உள்ள ஊடக அமைப்புக்கள், சுதந்திர ஊடக இயக்கம் உட்பட ஊடக தரப்பினரை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த ஒருவராவார்.

நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களின் அறிவிலும் ஆற்றல்களிலும் ஒரு திறன் விருத்தி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்யும் ஊடக பயிற்சி நெறிகளில் சிறந்த ஈடுபாட்டுடன் பங்குபற்றியதோடு இலங்கை முழுவதிலும் கடமையாற்றும் எல்லா ஊடகவியலாளர்களுடனும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று அனைவரதும் நண்பனாக செயற்பட்டார்.

ஊடக ஒழுக்கக்கோவை, தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம்ரூபவ் புலனாய்வு ஊடகவியல் என்று பல துறைகளில் சிறந்த பரிச்சயம் பெற்ற ஊடக வளவாலராக கடமையாற்றிய அவரின் இழப்பு ஊடக சமூகத்திற்கு பேரிழ்பாக அமைவதோடு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்pறடத்தையும் ஏற்படுத்திவிட்டது.

அத்துடன் சிறந்த ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளரும் ஊடக ஆலோசகருமாவார். தெற்கின் பயாகலையை பிறப்பிடமாகக் கொண்ட கமல் லியனாரச்சி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவதோடு அவரது மணைவி கமனி லியனாரச்சியும் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59