நுவரெலியாவில் முச்சக்கர வண்டி விபத்து - நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Digital Desk 4

22 Feb, 2022 | 04:29 PM
image

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுர பகுதியில்  இடம்பெற்ற முச்சக்கர வண்டி  விபத்தில் நான்கு பேர்  காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் (22) காலை 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பிரேக் இல்லாமல் இயந்திர செயற்பாட்டினை நிறுத்தி விட்டு  (நடுநிலை ) யில் முச்சக்கர வண்டியினை செலுத்தியதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மண் மேட்டில் மோதுண்டதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த  முச்சக்கர வண்டி சாரதியும் தந்தை ,தாய் மற்றும் சகோதரி என வண்டியில் பயணித்த 04 பேரும் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் 

நுவரெலியா சாந்திபுர வீதியில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது .இதனால் இவ் வீதியில் (நடுநிலை)யில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என நுவரெலியா பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் கடுமையாக அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இவ் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகரிக்கும் சைபர் குற்றங்களை தடுக்க சட்டங்களில்...

2026-05-21 16:09:37
news-image

தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கு...

2026-05-21 16:15:45
news-image

மலையக மக்கள் இன்னும் நவீன கொத்தடிமைகளே...

2026-05-21 19:02:12
news-image

சர்வதேச வல்லரசுகள் மௌனம் காக்கும் என்று...

2026-05-21 16:18:33
news-image

பதில் ஆசிரிய ஆலோசகர்கள் விரைவில் நிரந்தரமாக்கப்படுவர்...

2026-05-21 16:25:40
news-image

கல்வி மறுசீரமைப்பு முற்றாக முடக்கம்; அமைச்சு...

2026-05-21 16:29:11
news-image

வடக்கு கல்வி அதிகாரிகளின் சட்டவிரோத செயல்கள்...

2026-05-21 19:01:23
news-image

அந்தந்த காலச் சூழல்களில் அந்தந்த மக்களிடம்...

2026-05-21 18:59:26
news-image

கோட்டாபயவின் பாதையில்தான் அநுரவும் பயணிக்கிறார்; டொலர்...

2026-05-21 16:33:18
news-image

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய அர்ச்சுனாவுக்கு...

2026-05-21 16:30:55
news-image

சமூக ஊடக சர்ச்சை: வதந்திகளுக்கு சர்வஜன...

2026-05-21 17:05:56
news-image

டொலரின் பெறுமதி, இறக்குமதி பொருட்களின் விலை...

2026-05-21 16:59:29