கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Digital Desk 4

22 Feb, 2022 | 04:11 PM
image

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஜெ.கஜநிதிபாலனால் இந்த உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி இரவு  நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

தொடர்ந்து குறித்த மீனவர்கள் கடந்த 8 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்களை இன்று 22 ஆம் திகதிரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேக நபர்கள் மன்றில் முற்படுத்தப்படாத நிலையில் மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகரி ஒருவர் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

இதன் போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் குறித்த மீனவர்களிடம் கொரோனாத் தொற்று அச்சம் காரணமாக வாக்கு மூலம் பெறவில்லை எனவும் ஆகவே சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறும், அதுவரை 14நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவானிடம் தமது விண்ணப்பத்தை கோரியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த 3 வழக்குகளின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான், மீனவர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள்...

2024-06-24 15:08:58
news-image

கல்முனை பகுதியில் பதற்ற நிலை ;...

2024-06-24 15:45:07
news-image

விகாரைக்கு சென்று விட்டு வீடு திரும்பியவரை...

2024-06-24 15:04:30
news-image

2024இல் இதுவரையான காலப்பகுதியில் 27 இந்திய...

2024-06-24 15:25:32
news-image

வன பகுதியில் ஏற்பட்ட தீயால் 20...

2024-06-24 15:02:43
news-image

விமானத்தில் இலங்கையரின் பயணப் பொதியில் திருட்டு...

2024-06-24 14:59:17
news-image

ஐஸ் போதைப்பொருள் விநியோகித்த பிரதான சந்தேக...

2024-06-24 15:09:42
news-image

இரு பாரிய கஞ்சா செய்கையை ட்ரோன்...

2024-06-24 14:38:45
news-image

நீராடச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது...

2024-06-24 14:36:25
news-image

யாழ்.இளைஞனை வெளிநாட்டு அனுப்புவதாக கூறி பணமோசடி...

2024-06-24 14:23:36
news-image

1700 ரூபா நாள் சம்பளத்தை வழங்குமாறு...

2024-06-24 13:59:40
news-image

யாழில் தம்பதியினர் மீது வாள் வெட்டு

2024-06-24 13:53:10