பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர்களை மோதிய லொறி - மகள் பரிதாபப் பலி - தந்தை படுகாயம்

Published By: Digital Desk 4

22 Feb, 2022 | 02:27 PM
image

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.

விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த 33 வயதான சிவசுப்பிரமணியம் சிந்துயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்த்தி அதிக வேகமாக வந்த நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கனகராஜன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43