இந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட டெஸ்ட் மகுடம் இந்திய அணிக்கு வழங்கப்படவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

குறித்த ஐ.சி.சி.மகுடத்தை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியிடம் ஹொல்கார் சர்வதேச மைதானத்தின் உள்ளக அரங்கில் வைத்து வழங்க இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்துள்ள நிலையிலும், உத்தியோகபூர்வமாக நியுஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கான போட்டி நிறைவடைந்த பின்னரே தரவரிசை பட்டியல் அறிவிக்கப்படும்.

எனவே மூன்றாவது  போட்டி நிறைவடைந்த பின்னர் ஐ.சி.சி. டெஸ்ட் மகுடத்தை இந்திய அணி பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.