புதிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு

Published By: Vishnu

22 Feb, 2022 | 01:36 PM
image

புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரையான தலங்கம ஈரநிலப்பகுதிக்கு ஊடாக நான்கு வழித்தட உயர்மட்ட நெடுஞ்சாலை நிர்மாணிப்பதை தற்காலிகமாக தடை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை குறிப்பிட்ட திகதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை திட்டத்தை தொடர முடியாது என்று கூறியுள்ளது.

பத்தரமுல்லை, அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரினால் இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தினால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், தலங்கம சதுப்பு நிலத்தை தவிர்த்து, நெடுஞ்சாலையை அமைப்பதற்கு மாற்று வழியை கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு (RDA) அறிவுறுத்தியுள்ளது.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட 11 பிரதிவாதிகளுக்கு அடுத்த விசாரணையின் போது உண்மைகளை நீதிமன்றில் முன்வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய தங்க விலை நிலைவரம் !

2025-11-08 11:29:02
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-08 10:20:33
news-image

விபத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு!

2025-11-08 09:49:31
news-image

பெருமளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது

2025-11-08 09:49:12
news-image

இருவேறு வீதி விபத்துக்களில் இருவர் பலி!

2025-11-08 09:37:30
news-image

காலி - ஜாகொட்டுவெல்ல கடற்கரையில் அடையாளம்...

2025-11-08 08:56:17
news-image

துங்கல்பிட்டியவில் சட்டவிரோத பீடி இலைகள் மற்றும்...

2025-11-08 08:55:50
news-image

நீர்கொழும்பு ஏத்துகல கடல் நீரோட்டத்தில் சிக்கியவர்...

2025-11-08 08:47:45
news-image

கெப்பட்டிபொல பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி...

2025-11-08 08:45:42
news-image

இன்றைய வானிலை

2025-11-08 06:05:57
news-image

நாட்டு மக்களின் நலன் கருதி அரசாங்கம்...

2025-11-08 04:51:39
news-image

அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் டிஜிட்டல்...

2025-11-08 04:46:37