(எம்.ஆர்.எம்.வசீம்)

தேர்தல் சட்டங்கள் மற்றம் தேர்தல் முறை தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற விசேட குழு உள்ளிட்ட அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் பல  இவ்வாரம் பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளன.

அதற்கமைய, இன்றைய தினம் வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழு, விவசாய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. 

நாளை  தொழில் அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன.

அத்துடன் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு எதிர்வரும் 24 ஆம் திகதி கூடவுள்ளதது. 

அத்துடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாளர் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்துக்கமைய பாராளுமன்றம் இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கூடுகின்றது. 

இன்றைய தினம் விளைபொருட் தரகர்களுக்கு உரிமமளித்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இறப்பர் மீள்நடுகை மானியச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.