உக்ரேனிய பிரதேசங்களின் சுதந்திரத்தை புடின் அங்கீகரித்தார்

Published By: Vishnu

22 Feb, 2022 | 08:32 AM
image

உக்ரேனுடனான அதிகரித்த பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செவ்வாய் அதிகாலையில் உக்ரேனின் இரண்டு பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகியவற்றின் சுதந்திரத்தை அங்கீகரித்தார். 

Russian President Vladimir V. Putin chairing a meeting with members of Russia’s Security Council in Moscow, on Monday.

நாட்டிற்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரைக்கு பின்னர், புடின் உக்ரேனின் ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதத் தலைவர்களுடன் நட்பு மற்றும் உதவி ஒப்பந்தங்களில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார்.

இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில் புடின், நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை கிழக்கு பிராந்தியங்களில் "அமைதியைப் பேணுவதற்கான செயல்பாட்டை" ஏற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை புடின் கூட்டிய பின்னர், கிழக்கு உக்ரேனில் ரஷ்யா ஆதரவு பெற்ற பிரிவினைவாத பிராந்தியங்களின் "சுதந்திரத்தை" அங்கீகரிப்பது பற்றி உரையாடியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

புடினின் அறிக்கையைத் தொடர்ந்து, உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தை கூட்டினார். 

2014 ஆம் ஆண்டு முதல் உக்ரேனியப் படைகளுடன் போரிட்டு வரும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாயகமான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் உள்ளது.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் இந்த இருப்பு இரு பிராந்தியங்களிலும் "அமைதிகாக்கும் செயல்பாடுகள்" என்று ரஷ்யா கூறுகின்றது. ஆனால் ரஷ்யா தனது இறையாண்மையை வேண்டுமென்றே மீறுவதாக உக்ரேன் ஜனாதிபதி குற்றம் சாட்டி வருகிறார்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை புடின் அங்கீகரிப்பது ரஷ்ய வீரர்கள் உக்ரேனின் கிழக்கில் அதிகாரப்பூர்வமாக நுழைவதற்கு வழி வகுக்கும் என்று மேற்கத்திய சக்திகள் அஞ்சுகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கில் உள்ள ஏராளமான மக்களுக்கு ரஷ்ய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மேற்கத்திய நட்பு நாடுகள் ரஷ்யா இப்போது தனது குடிமக்களைப் பாதுகாக்கும் போர்வையில் இராணுவப் பிரிவுகளை நகர்த்தக்கூடும் என்று அஞ்சம் வெளியிட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியிலேயே புடினின் மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47