மின்சாரம் வழங்கல், வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பில் செய்யப்பட வேண்டிய அனைத்து அவசிய அல்லது தேவைப்படும் சேவைகள்/ பணிகள் என்பவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்பத்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷக்கு இந்த பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.

அதன்படி எந்தவொரு அரசாங்க கூட்டுத்தாபனம் அல்லது அரசாங்க திணைக்களம் அல்லது உள்ளூராட்சி நிறுவனம் அல்லது கூட்றவுச் சங்கம் அல்லது அவற்றின் ஏதேனும் கிளையொன்றினால் வழங்கப்படும் சேவைகள் பொது மக்களின் வாழாக்கைக்கு அத்தியாவசியமானது எனக் கருத்தில் கொண்டும், மற்றும் அச் சேவைகளை வழங்குவதற்கு இடையூறு ஏற்படுக்கூடும் என்ற காரணத்தினாலும் மேற்குறிப்பிட்ட சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், நேற்று முதல் அது அமுலுக்கு வரும்.