இந்திய சுற்று பயணத்திற்கான இலங்கை டி:20 அணி அறிவிப்பு

By Vishnu

21 Feb, 2022 | 02:52 PM
image

இந்தியாவுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான இலங்கை அணியை தெரிவுக்குழு தேர்வ செய்துள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த அணிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

03 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் பெப்ரவரி 24 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும்.

டி:20 தொடரின் பின்னர் இலங்கை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

 

இலங்கை அணி

 • தசுன் ஷானக்க – அணித் தலைவர்
 • பத்தும் நிஸ்ஸங்க
 • குசல் மெண்டீஸ்
 • சரித அசலங்க – உப தலைவர்
 • தினேஷ் சந்திமால்
 • தனுஷ்க குணதிலக்க 
 • கமில் மிஸ்ரா
 • ஜனித் லியனகே
 • வனிந்து ஹசரங்க
 • சமிக கருணாரத்ன
 • துஷ்மந்த சமீர
 • லஹிரு குமார
 • பினுர பெர்னாண்டோ
 • ஷிரான் பெர்னாண்டோ
 • மகேஷ் தீக்ஷண
 • ஜெஃப்ரி வாண்டர்சே
 • பிரவீன் ஜயவிக்ரம
 • அஷேன் டனில் 

இதற்கிடையில் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது உபாதைக்குள்ளான கீழ் கண்ட வீரர்களும் பூரண குணமடைந்து அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • அவிஷ்க பெர்னாண்டோ
 • நுவான் துஷார
 • ரமேஷ் மெண்டிஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right