கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரத்மலானை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியமையினால் குறித்த நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மொரட்டுவை கல்தெமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தைவிட்டுத் தப்பி தலை மறைவாகியுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.