நிறுவனம் எச்சரிக்கை : வெடித்து சிதறும் சம்சுங் : கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம்

Published By: Robert

11 Oct, 2016 | 11:07 AM
image

தீபிடித்து எரிவது தொடர்பான தொடர் புகார்களின் எதிரொலியாக உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் கேலக்ஸி நோட் 7’ ரக கைபேசிகளை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி சம்சுங் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இத்தாலி நாட்டில் சமீபத்தில் ஒருவர் கடந்த மாதம் தனது ’சம்சுங் கேலக்ஸி நோட் 7’ ஸ்மார்ட் கைபேசிகளின் பேட்டரியை ரீசார்ஜ் செய்தபோது அந்த கைபேசி திடீரென்று வெடித்து சிதறியது.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சம்சுங் கேலக்ஸி நோட் 7 கைபேசிகளை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியது.

தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சம்சுங்கின் புதுரக கைபேசி வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் கைபேசிகளை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது. புதிய கைபேசிகளின் விற்பனையையும் நிறுத்தி வைத்தது.

ஆஸ்திரேலியாவில் சம்சுங் கேலக்ஸி நோட் 7 ரக கைபேசிகளும்; திரும்பப்பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, விமானத்தில் அந்த குறிப்பிட்ட ரக கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது.

பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ‘சம்சுங்; கேலக்ஸி நோட் 7’ ஸ்மார்ட் கைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்தது. 

அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ள கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட் கைபேசிகளை திரும்பப் பெற்றுகொள்வது தொடர்பாக முறைப்படியான அறிவிப்பை சம்சுங் நிறுவனம் வெளியிட வேண்டும் என்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், திரும்பப் பெறப்படும் கைபேசிகளுக்கு மாற்று ஏற்பாடு என்ன? என்பது தொடர்பாக அந்நிறுவனம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், குறைபாடு கொண்ட கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட் கைபேசிகளுக்கு மாற்றாக புதிதாக மாற்றித் தரப்பட்ட இதேவகை கைபேசிகளும் தீபற்றி எரிந்ததாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், இவ்விவகராம் தொடர்பாக விசாரித்துவரும் சம்சுங் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கேலக்ஸி நோட் 7 ரக ஸ்மார்ட் கைபேசிகளின் விற்பனை மற்றும் குறைபாடு கொண்ட தயாரிப்புக்கு பதிலாக வேறு கைபேசிகளை மாற்றித் தருவதை நிறுத்தி வைக்குமாறு உலகில் உள்ள எங்களது முகவர்களை அறிவுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்தவகை கைபேசிகளை பயன்டுத்தி வரும் வாடிக்கையாளர்களும், குறைபாடுகளுக்காக மாற்றாக புதிய கைபேசிகளை பெற்ற வாடிக்கையாளர்களும் தங்களது கைபேசிகளை பயன்படுத்தாமல் ‘ஸ்விட்ச்ஆப்’ செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07