நிர்வாக எல்லைகளின் அதிகாரங்களை கையிலெடுக்கிறது மகாவலி அதிகாரசபை ? அவசர கலந்துரையாடலுக்கு அழைப்பு

20 Feb, 2022 | 03:40 PM
image

(ஆர்.ராம்)

மகாவலி அதிகார சபையின் அதிகார எல்லையினுள் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்படுத்துதல் தொடர்பில் நீர்ப்பாசன அமைச்சரும்  அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சரும் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலொன்றுக்காக எட்டு மாவட்ட செயலாளர்களுக்கு அவசர அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, பதுளை, நுவரெலியா, ஆகிய எட்டு மாவட்டங்களின் செயலாளர்களுக்கே மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி, அதிகார சபையின் அதிகார எல்லையினுள் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் அபிவிருத்தி கருத்திட்டங்களை செயற்படுத்தல் எனும் தலைப்பிலான குறித்த அழைப்புக் கடிதத்தில், மகாவலி வலயத்தினை அண்டிய கால்வாய்கள், மற்றும் குடியேற்றங்கள், பொது உட்கட்டமைப்பு வசதிகள், அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளரின் கடிதத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம், 1979ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்கத்தினை உடைய இலங்கை மகாவலி அதிகாரசபை சட்டத்தின் அதிகாரத்திற்கு அமைவாகரூபவ் ‘மகாவலி விசேட அதிகார எல்லையாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தினுள் நிர்வாக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பின்றி திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு அதிகார எல்லையை சரியாக இனங்காண்பது தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்படவுள்ளதால் அதில் மாவட்ட செயலாளர்களை பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மகாவலி விசேட அதிகார எல்லையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் நிர்வாக அதிகாரங்கள் மீளப்பெறப்படுகின்றபோது குறிப்பாக வடமாகாணத்தில் வவுனியாவின் வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவின் அதிகாரத்தினுள் காணப்படுகின்ற காணிகள்ரூபவ் குளங்கள்ரூபவ் கால்வாய்கள் உள்ளிட்டவை மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவுள்ளன.

அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று, வெலிஓயா, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசசெயலாளர் பிரிவுகளில் உள்ள காணிகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள், வயல்கள் உள்ளிட்டவை மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டிற்குள் செல்லவுள்ளன.

ஏற்கனவே இப்பகுதிகளில் மகாவலி எல் மற்றும் மகாவலி ஜே, மகாவலி கே ஆகிய வலயங்கள் விஸ்தரிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தமது நிலபுலங்களை பறிகொடுக்க நேரிடும் என்பதோடு குடிப்பரம்பலும் மாற்றப்படும் என்பதைச் சுட்டிக்காட்டி 2018ஆம் ஆண்டு முல்லைத்தீவில் பாரியதொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி அமைச்சர் சமலுக்கு கடிதமொன்றை கையளித்ததோடு கலந்துரையாடலிலும் ரூடவ்டுபட்டனர். அதன் பின்னர்,வ் இச்செயற்பாடுகள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. அத்துடன் பிரதேசசெயலாளர்களின் அனுமதியின்றி எவ்விதமான காணிகள் உள்ளிட்ட விடயங்களை முன்னகர்த்த முடியாது என்றும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் தற்போது, மாகாவலி அதிகாரசபை தனது திட்டத்தின் கீழ் காணப்படும் எல்லைகளை மீளவும் வரையறுத்து அவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதற்கான நடவடிக்கைக்கையின் அங்கமாக மேற்படி கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:34:49
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03