செப்டெம்பர் 20 இற்குப் பின் உள்ளூராட்சி தேர்தலை நடத்தும் அதிகாரம் எம்மிடம் என்கிறார் புஞ்சிஹேவா

20 Feb, 2022 | 02:51 PM
image

(ஆர்.ராம்)

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் எதிர்வரும் புதன்கிழமை முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல்புஞ்சிஹேவா, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவானது, பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு தனது முன்மொழிவுகளைச் செய்துள்ளது. 

அதில், தேர்தல் சட்டங்கள், சீர்திருத்தங்கள், நிதிக் கையாளுகை உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள முன்மொழிவுகள் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன் ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் ஆதரவுகள் தொடர்பில் கருத்துப்பெப்படவுள்ளது.

அதேநேரம், தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில் அரசியல் கட்சிகளால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டு வரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

குறிப்பாக, வேட்புமனுக்கள் தாக்கலின்போது அரசியல்கட்சிகளின் அங்கத்தவர்கள் அளித்து வரம் பங்களிகப்புக்கள் உள்ளிட்ட விடயங்களில் அவற்றின் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது என்றார்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான தயார்ப்படுத்தலா?

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெறுகின்றனவா என்று வினவியபோது, தற்போது, உள்ளூராட்சி மன்றங்களின் காலம் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், எதிர்வரும் செப்டெம்பர் 20வரையில் இக்கால நீடிப்பு உள்ளது. இந்தக் கால நீடிப்பானது விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் அரசியலமைப்பில் காணப்படும் சட்டங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, செப்டெம்பர் 20 இற்குப் பின்னரே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.

எனினும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் சட்டத்தில் சிறுசிறு திருத்தங்கள் ஏற்படுகின்றபோது தேர்தல் நடத்துவதில் எவ்விதமான தடைகளும் ஏற்படாது. ஆனால் முழுமையாக தேர்தல் முறைமை மாறுகின்றபோது அதற்கான அங்கீகாரத்தினை பாராளுமன்றம் வழங்க வேண்டி ஏற்படும். அவ்விதமான நிலைமைகள் காணப்படுமாயின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலதாமதமாகலாம் என்றார்.

இரத்துச் செய்யப்பட்ட சின்னங்கள்

இதேவேளை, 1988 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் இரண்டு சின்னங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு கடந்த 14 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமான அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய இரு சின்னங்களே இவ்வாறு இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29