பிரேசில் வெள்ளத்தால் 146 பேர் பலி ; பாதகமான வானிலையால் மீட்பு பணிகள் பாரிய சிக்கலில்

By Vishnu

20 Feb, 2022 | 11:33 AM
image

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் பேரழிவினை தரும் வெள்ளம் மற்றும் மண்சரிவினையடுத்து உயிர் தப்பியவர்களை தேடுவதற்கான மீட்பு பணிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.

Firefighters are seen during a rescue mission after a giant landslide at Caxambu neighborhood in Petropolis

தொடர் மழை காரணமாக அவசரக் குழுக்கள் சனிக்கிழமையன்று பலமுறை தங்கள் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. 

அனர்த்தம் காரணமாக குறைந்தது 27 குழந்தைகள் / சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட மொத்தம் 146 பேர் உயிரிழந்துள்ளனர், அதேநேரத்தில் காணால்போன 191 நபர்களை தேடும் பணிகளும் பாதகமான வானிலையினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

900 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பிரேசில் அதிகாரிகள் கூறுகினறனர்.

அனர்த்த பகுதிகளில் 41 மோப்ப நாய்களின் உதவியுடன் நவீன கருவிகள் மற்றும் செயின்சர்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right