கிழக்கு உக்ரேனில் 2,000 போர்நிறுத்த மீறல்கள் பதிவு

Published By: Vishnu

20 Feb, 2022 | 11:16 AM
image

1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை முன்னெடுக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

உக்ரேன் தலைநகர் கியேவை சுற்றி வளைக்கும் படையெடுப்பை ரஷ்யா நடத்த உத்தேசித்துள்ளதாக உளவுத்துறை தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை கிழக்கு உக்ரேனில் கிட்டத்தட்ட 2,000 போர்நிறுத்த மீறல்கள் சனிக்கிழமையன்று ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் கண்காணிப்பாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் ஞாயிற்றுக்கிழமை உறுதிபடுத்தியுள்ளன.

A Ukrainian service member is seen on the front line near the village of Zaitseve in the Donetsk region, Ukraine February 19, 2022. REUTERS/Gleb Garanich

இந் நிலையில் உக்ரேனின் ஜனாதிபதி Volodymyr Zelenskyy, நாட்டின் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் மொஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு மேற்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

சனிக்கிழமையன்று Munich பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய Zelenskyy, உக்ரைனுக்கு புதிய உத்தரவாதங்களை வழங்க ஜேர்மனி மற்றும் துருக்கியுடன் ரஷ்யாவை உள்ளடக்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்ட விரும்புவதாக கூறினார்.

உக்ரேனிய அரசாங்கமும் பிரிவினைவாத சக்திகளும் 2014 இல் இருந்து கிழக்கு உக்ரேனில் சண்டையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52