பூரண், பவல் ஆகியோரின் முயற்சி கைகூடவில்லை : இந்தியா மீண்டும் வெற்றி : தொடரையும் கைப்பற்றியது

19 Feb, 2022 | 01:43 PM
image

(என்.வீ.ஏ.)

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்ற விறுவிறுப்பான 2 ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 8 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க, 2 - 0 என்ற ஆட்டக்கணக்கில் இந்தியா தொடரை தனதாக்கிக்கொண்டது.

Virat Kohli made a brisk start, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

முன்னாள் அணித் தலைவர் விராட் கோஹ்லி, ரிஷாப் பன்ட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் கடைசிக் கட்டத்தில் கட்டுப்பாடான பந்துவீச்சுகளும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

Rohit Sharma and Virat Kohli shared a 49-run stand, 2nd T20I, Kolkata, February 18, 2022

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றது.

இஷான் கிஷான் (2), ரோஹித் ஷர்மா (19), சூரியகுமார் யாதவ் (8) ஆகிய மூவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஆனால், விராட் கோஹ்லி 52 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் வெங்கடேஷ் ஐயர் 33 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

Virat Kohli goes big, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

இதனிடைவே விராத் கோஹ்லி, ரிஷாப் பன்ட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட், வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் 5 ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.

Rishabh Pant pulls one away over short fine leg, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ரொஸ்டன் சேஸ் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

Sheldon Cottrell celebrates the wicket of Ishan KIshan, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

Yuzvendra Chahal is mobbed by his team-mates, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

ஆரம்ப வீரர்களான கய்ல் மேயர்ஸ் (9), ப்ரெண்டன் கிங் (22) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் ஜோடி சேர்ந்த நிக்கலஸ் பூரனும் ரோவ்மன் பவலும் 3ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு அச்சமூட்னர்.

Nicholas Pooran unleashes a big slog-sweep, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

பூரன் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த பின்னர் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 15 பந்துகளில் 28 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

Rovman Powell hits one for a six, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

ஆனால், இந்திய பந்துவிச்சாளர்கள் கட்டுப்பாட்டுடன் பந்துவீச்சி 19 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

Ravi Bishnoi celebreates after dismissing Brandon King, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

ரோவ்மன் பவல் 36 பந்தகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 4 பவுண்ட்றிகள் அடங்கலாக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Rovman Powell's 36-ball 68 went in vain, India vs West Indies, 2nd T20I, Kolkata, February 18, 2022

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20