இலங்கை மின்சார சபைக்கு மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் தினசரி பிற்பகல் 02.30 தொடக்கம் 06.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், மாலை 06.30 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில நாடுதழுவிய ரீதியில் இரண்டு முறை நான்கு கட்டங்களாக மின்விநியோகத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்விநியோக துண்டிப்பு எ.பி.சி.டி என நான்கு கட்டங்களாக அமுல்படுத்தப்படும்.
நாடுதழுவிய ரீதியிலான மின்விநியோக துண்டிப்பை இரு வார காலத்திற்கு நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டால் இன்றும்,நாளையும் மின்விநியோகத்தை துண்டிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ள பட்டியலை வெளியிட்டது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM