தேர்தல் முறைமை குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதில் சிக்கல் : ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழு

By T. Saranya

18 Feb, 2022 | 05:39 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றத்தை அங்கிகரிக்கும் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒருமித்த தீர்மானம் காணப்படாததால் தேர்தல் முறைமை குறித்த இறுதி தீர்மானம் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை. 

தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவின் உறுப்பினர் மதுரவிதானகே தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போடுவதாக எதிர்தரப்பினர் தவறான கருத்துக்களை பொது மக்கள் மத்தியில் குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதான நிலைப்பாடாக உள்ளது.

தேர்தல் சட்டம் திருத்தம், அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தேர்தல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்களை ஒன்றிணைத்து சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் முறைமை தொடர்பிலான பாரர்ளுமன்ற தெரிவு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம்,பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,நிமல்சிறிபால டி சில்வா,ரவூப் ஹக்கீம்,மனோ கனேஷன்,ரஞ்சித் மத்தும பண்டார,கபீர் ஹசிம்,எம்.ஏ.சுமந்திரன்,அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தேர்தல் முறைமை தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

தேர்தல் முறைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரது ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் முறைமை தொடர்பில் பாராளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிடம் இணக்கப்பாடு காணப்படாத காரணத்தினால் இதுவரையில் தேர்தல் முறைமை தொடர்பில் இறுதி தீர்மானம் முன்னெடுக்கப்படவில்லை.

தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல் நிலைமைக்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்தினால் அது மாறுப்பட்ட பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

தேர்தல் முறைமை தொடர்பில் சிறந்த தீர்மானத்தை எடுக்காமல் தேர்தலை நடத்த முடியாது. மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சம் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. வெகுவிரைவில் தேர்தல் இடம்பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right