நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 21 வயது இளைஞன் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை
கேகாலை - ரம்புக்கனை ,தலுக்கல பிரதேசத்தில்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1 கிராம் 190 மில்லிகிராம் மற்றும் 1 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் 21, 28 வயதுடைய பத்தம்பிட்டிய மற்றும் ரம்புக்கனை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென தெரிவித்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
குருணாகல்
குருணாகல் - பமுனாவலை பிரதேசத்தில் 1கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் 30 வயதுடைய ஹெல்கம உஹுமிய பிரதேசத்தைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம்
யாழ்.குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நல்லூர் அரியாலைப்பகுதியில் 10கிராம் 20மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நேற்றையதினம் யாழ். நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பொரளை
பொரளையில் 6கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 42 வயதுடைய சந்தேகநபர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இதேவேளை நேற்றைய தினம் மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதி முன்னெடுத்து வருகின்றனர்.