காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

By T Yuwaraj

17 Feb, 2022 | 04:22 PM
image

நீர்கொழும்பு  கொச்சிக்கடை ஒப்பெரிய பிரதேசத்தில் இருந்து 2022 ஜனவரி 22 ஆம் திகதி முதல்  காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

மெரின் ஸ்டீபன் என அடையாளம் காணப்பட்ட குறித்த சிறுவன் “ஒட்டிசம்” பாதிப்புடையவர் என்றும், அருகில் உள்ள தேவாலயத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக கூறி அந்த திகதில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து காணாமல் போன சிறுவனின் பெற்றோர் அளித்த முறைப்பாட்டையடுத்து கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன சிறுவன் தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் 07-8591631, 031-2277222, மற்றும் 031-2276338 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right