உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் சரிவு : உலக சுகாதார அமைப்பு தகவல்

17 Feb, 2022 | 02:26 PM
image

உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் சரிவு அடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலைவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், கடந்த வாரத்தில் உலகமெங்கும் ஒரு கோடியே 60 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

 75 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகி உள்னனர்.

இந்த எண்ணிக்கை மூலம் உலகளவில் ஒரு வார கால தொற்று பாதிப்பு 19 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறப்புகள் நிலையாக உள்ளன.

அவுஸ்திரேலியா, கம்போடியா, சீனா, பிஜி, பிலிப்பைன்ஸ், ஹொங்காங், தென்கொரியா உள்ளிட்ட 37 நாடுகளைக் கொண்ட மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் தொற்று பாதிப்பு 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் தென்கிழக்கு ஆசியாவில் 37 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. உலகளவில் இது மிகப்பெரும் சரிவு ஆகும், மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா இறப்பு 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய பாதிப்புகள் அதிகளவில் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் சமீப வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.  இது ஒமிக்ரோன் வைரசால் ஏற்பட்ட பாதிப்பாகும்.

ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து வீழ்ந்துள்ளது. ஒமிக்ரோன் தொற்று அவற்றை வெளியேற்றி உள்ளது.

இதேவேளை ஒரு வாரத்தில் 4 இலட்சம் மரபணு வரிசைப்படுத்தல் பரிசோதனைகள் பதிவாகி உள்ளன, இதில் 98 சதவீதத்துக்கும் கூடுதல் ஒமிக்ரோன் பாதிப்பு  என கண்டறியப்பட்டுள்ளது.

ஒமிக்ரோனின் பிஏ.2 வகை நிலையாக அதிகரித்து வருகிறது. தென்னாபிரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளில் எழுச்சி பெறுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின்...

2024-09-17 20:29:48
news-image

டெல்லியின் அடுத்த முதல்வராகிறார் அதிஷி: பெயரை...

2024-09-17 15:58:36
news-image

சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பின்னர் நாளை...

2024-09-17 11:43:12
news-image

டிரம்ப் கொலை முயற்சி - 12...

2024-09-17 10:40:52
news-image

நைஜீரியாவில் வெள்ளம் : சிறைச்சாலை சுவர்...

2024-09-17 11:03:16
news-image

புதுடெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா:...

2024-09-17 10:12:24
news-image

ரஷ்ய ராணுவத்தினரால் அடிமைகள் போல் நடத்தப்பட்டோம்:...

2024-09-16 14:56:05
news-image

சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி ;...

2024-09-16 13:48:23
news-image

டிரம்பை கொலை செய்ய முயற்சித்தவர் உக்ரைன்...

2024-09-16 11:47:32
news-image

உத்தரபிரதேசத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து...

2024-09-16 09:30:51
news-image

டிரம்பை கொல்வதற்கு மீண்டும் முயற்சி-சந்தேக நபர்...

2024-09-16 07:11:47
news-image

நைஜீரியாவில் படகு விபத்து - 64...

2024-09-15 12:49:20