முல்லைத்தீவில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்

By T Yuwaraj

17 Feb, 2022 | 02:07 PM
image

முல்லைத்தீவு  நட்டாங்கண்டல் கொம்பு வைத்த குளம் பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு  மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட   நட்டாங்கண்டல் கொம்பு வைத்த குளம் பகுதியில் வயலுக்குச் சென்று திரும்பிய குடும்பஸ்த்தர்  ஒருவர், கட்டுத்துவக்கு வெட்டித்ததில் காலில் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 அங்கு சிகிச்சையளிக்கப்பட்டதுடன்  கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதையடுத்து குறித்த ம்பவம் தொடர்பில் மாங்குளம் நட்டாங்கண்டல்  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right