மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று போயா தினத்தன்று சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பேண்களை நேற்று கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 43 மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய நேற்று ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பு பகுதியில் உள்ள 3 வீடுகளை பொலிசார் முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்ட போது மதுபானவிற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 21; கால் போத்தல்களுடன் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து இன்னும் ஒரு வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரிடமிருந்து 22 கால் போத்தல்களுடன் அவரை கைது செய்தனர்.
அத்தோடு குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் 3350 மில்லிககிராம் கஞ்சாவுடன் பெண் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM