முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் சர்வதேசத்திடம் இருந்து கடன்கள் வாங்கப்பட்டதன் நோக்கம் நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டே ஆனால் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்திடம் கடன்களை பெறுவது தமது சுய நோக்கங்களுக்காகவே என முன்னாள் விளையாட்டு துறை அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவருமான மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், மலையக அரசியல் வாதிகளும் கூட்டமாக இணைந்து மலையக மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இங்கிலாந்தின் போபர்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளதகவல்களின் பிரகாரம்   கடந்த ஆட்சியிலேயே சர்வதேசத்திடம் இருந்து அதிகளவிலான கடன் தொகைகள் பெறப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனை  தெரிவித்தார்.