நாட்டில் வறுமையின் பிடியில் 5 இலட்சம் பேர் ; இலங்கையின் பொருளாதாரம் மோசமடையும் - ரணில் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

17 Feb, 2022 | 02:54 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து எதிர்வரும் வாரம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை மீது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அதனை பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அவர் விசேட காணொளியை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. டொலர் மற்றும் ரூபா நெருக்கடிகளுக்கு இதுவரையில் தீர்வு காணப்படவில்லை.

சந்தையில் டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதி 250 ரூபாவை காட்டிலும் அதிகமாகவுள்ளது. தற்போதைய நிலைமையில் அப்பெறுமதி 270 ரூபாவை அண்மித்து வருட இறுதியில் 300 ரூபாவாக அதிகரிக்க கூடும்.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வறுமை கோட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகரிக்க கூடும். நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அரசமுறை கடன்களை மீள்செலுத்த தேவையான டொலர்களை திரட்டிக்கொள்ள வேண்டும். இவ்வருடம் மாத்திரம் 6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை செலுத்த வேண்டும்.

நிதி கட்டமைப்பில் காணப்படும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இதுவரை பேச்சுவார்த்தையில் ஈடுப்படவில்லை.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து அரசாங்கம் அவாலா முறைமையின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுக்கின்றதால் தேசிய வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். அதன் தாக்கத்தை நடுத்தர மக்கள் எதிர்க்கொள்ள நேரிடும்.

சர்வதேச நாணய நிதியம் அந்நிறுவன யாப்பின் 4 ஆவது அத்தியாயத்த்திற்கமைய அதன் உறுப்பு நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து ஒவ்வொரு வருடமும் ஆராயும்.

நாணய நிதியத்தின் நிபுணர் குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து மதிப்பீடுகளை மேற்கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணர் குழுவினர் இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையை எதிர்வரும் வாரம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர். 

இவ்வறிக்கை தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி அதனை பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். நாவாந்துறையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்...

2024-04-15 07:43:44
news-image

இன்றைய வானிலை

2024-04-15 06:18:46
news-image

நுவரெலியா - மீபிலிபான இளைஞர் அமைப்பின்...

2024-04-15 03:09:11
news-image

தமிழினப் படுகொலையின் 15ஆவது ஆண்டில் ‘இனப்படுகொலையின்’...

2024-04-15 02:53:31
news-image

வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட இளம்...

2024-04-15 00:26:54
news-image

பொது வேட்பாளர் விடையத்தை குழப்ப பலர்...

2024-04-14 23:04:21
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : கறுப்பு...

2024-04-14 20:56:22
news-image

பலாங்கொடையில் இளைஞர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை!

2024-04-14 19:44:28
news-image

வெளி மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்காக...

2024-04-14 18:31:44
news-image

நாட்டில் பல இடங்களில் இடியுடன் கூடிய...

2024-04-14 17:58:50
news-image

புதுவருட தினத்தில் காணாமல்போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!

2024-04-14 17:45:32
news-image

தமிழ் மக்களின் திடமான அரசியல் கொள்கைக்கு...

2024-04-14 15:05:29