கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கைக் கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத குழுவிற்கு மூளையாக செயற்பட்ட குஹாரி அஜ்மல் நேற்று ஆப்கானிஸ்தானில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கைக் கிரிக்கெட் அணி 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, போட்டி நடைபெறும் கடாபி மைதானத்திற்கு அணி வீரர்கள் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த வேளையில், அந்த பஸ் மீது ஆயுதம் தாங்கிய 10 பேர் கொண்ட தீவிரவாத குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் போது ரொக்கெட் தாக்குதலும் நடத்தப்பட்டது.இந்த சம்பவத்தின்போது 6 வீரர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். மற்றும் 8 பாகிஸ்தான் நாட்டவர்களும் கொல்லப்பட்டனர்.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தான் சென்று எந்த அணியும் இதுவரை விளையாடவில்லை. இந்நிலையில் அந்தச் சம்பவத்திற்கு மூளையாக செயற்பட்ட குஹாரி அஜ்மல், ஆப்கானிஸ்தானின் பகிடிக்காவில் மறைந்திருந்தபோது ஆப்கானிஸ்தான் இராணுவமும் நேட்டோ படையும் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் லஸ்கர் - ஈ - ஜாங்கவி அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் இந்த அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கடந்த மாதம் லாகூரில் வைத்து பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM