தேசிய தேர்தல்கள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன்  அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு

17 Feb, 2022 | 12:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத்தை  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும்,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட பேச்சுவார்த்தை  எதிர்வரும் 23ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ,மாகாண சபை தேர்தல் ஆகிய இரு பிரதான தேர்தல்களை நடத்தவதற்கான தேவை அத்தியாவசியமானதாக காணப்படும் பட்சத்தில் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள் யோசனைகளை செயற்படுத்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் மாகாண சபை தேர்தல் அல்லது உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக ஆளும் தரப்பின் முக்கிய தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

60 சதவீத பிரதிநிதிகளை விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலும் 40 சதவீத பிரதிநிதிகளை தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ் தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டம் மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழு கடந்தவாரம் கூடியபோது இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் சகல அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  உள்ளுராட்சிமன்றங்களின் தற்போதைய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைஇவிருப்பு வாக்கு முறை ஆகியன பற்றிய பொதுமக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைவடைந்துள்ளன.

விகிதாசார பிரதிநிதித்தவ முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைமை ஆகியவற்றில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மிகச்சிறந்த தேர்தல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும்...

2024-10-12 02:12:57
news-image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 அரசியல் கட்சிகள்,...

2024-10-12 02:05:39
news-image

வாள்வெட்டில் காயமடைந்தவர் மரணம் - பலி...

2024-10-11 22:29:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள்,...

2024-10-11 21:03:53
news-image

ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு...

2024-10-11 20:17:54
news-image

2024 பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில்...

2024-10-11 18:28:36
news-image

திருகோணமலை மாவட்டத்தில்  17 அரசியல் கட்சிகள்,...

2024-10-11 17:48:46
news-image

வீதியில் இரு நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்...

2024-10-11 17:36:15
news-image

மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு...

2024-10-11 16:56:28
news-image

சாதகமான வளர்ச்சி பதிவாகி வருகிறது; ஆனால்...

2024-10-11 16:26:20
news-image

கண்டியில் கைவிடப்பட்ட வீட்டின் பின்புறத்திலிருந்து ஆணின்...

2024-10-11 16:29:32
news-image

வன்னியில் 47 கட்சிகள், சுயேட்சை குழுக்களின்...

2024-10-11 16:19:32