உத்தரபிரதேசில் நடந்த திருமண நிகழ்வில் சோகம் ; கிணற்றுக்குள் வீழ்ந்து 13 பெண்கள் பலி

By Vishnu

17 Feb, 2022 | 11:10 AM
image

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் இடம்பெற்ற திருமண கொண்டாட்டத்தின் போது கிணற்றில் தவறி வீழ்ந்து ஒரு குழந்தை உட்பட குறைந்தது 13 பெண்களும் சிறுமிகளும் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் புதன்கிழமை திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது விருந்தினர்களில் பெண்கள் வீட்டிற்கு பின்னால் அமைந்திருந்த கிணற்றின் மேல் ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

கிணற்றின் மேல் பகுதி இரும்பு வலையான ஆன கான்கிரீட் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது ஏறி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இரும்பால் ஆன கான்கிரீட் மேல் தளம் வலிமையாக இருப்பதாக கருதி 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கிணற்றின் மீது ஏறி நின்று பேசிக்கொண்டிருந்தனர். 

அப்போது, பாரம் தாங்காமல் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த இரும்பாலான கான்கிரீட் மேல் தளம் திடீரென இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது.

இதில், மேல் தளத்தில் நின்றுகொண்டிருந்த பெண்கள் அனைவரும் ஆழமான கிணற்றுக்குள் விழுந்தனர்.

இந்த கோர விபத்தை கண்ட அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மீட்புபடையினர் கிணற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, 15 க்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.  ஆனால், கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயமடைந்து 13 பேர் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் (இந்திய) நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25
news-image

ஆங் சாங் சூகியின் பொருளாதார ஆலோசகரான...

2022-09-29 14:31:59
news-image

உக்ரேனில் கைப்பற்றிய பகுதிகளை இணைக்கிறது ரஷ்யா

2022-09-29 13:08:24
news-image

பாக்கிஸ்தான் பொலிஸார் எதிர்நோக்கும் புதிய நெருக்கடி-...

2022-09-28 16:04:03
news-image

தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு...

2022-09-28 16:02:57
news-image

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு...

2022-09-28 15:11:59
news-image

சவுதி அரேபியாவின் பிரதமராக இளவரசர் முகமது...

2022-09-28 11:17:49
news-image

வீட்டுக் காவல் வதந்திக்கு பிறகு முதன்...

2022-09-28 10:44:04
news-image

ரஷ்யாவில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு

2022-09-28 09:21:33