ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற நலீன் பண்டார விடுதி அறை குளியலறையினுள் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் காயமடைந்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், 

அன்று விடுதி குளியலறைக்கு சென்றபோது தன்னை யாரோ தள்ளிவிட்டதாகவும் இதனால் தான் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும்,

அந்த சம்பவ நேரத்தில் அறை பூட்டியிருந்ததாகவும் தான் மாத்திரமே குறித்த அறையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

1905 வருடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த விடுதி 1980 முதல் பாராளுமன்ற உறுப்பினர் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இந்த விடுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். எனினும் இப் பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இங்கு பல மர்ம சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நான் இப்போது அறிந்துகொண்டேன்.

அமானுஷ்மான எதோ ஒன்று தன்னை தள்ளிவிட்டதாகவும் தான் பேய் பிசாசு போன்றவற்றை நம்புவதில்லை எனவும் ஆனால் இவ்வாறு நடந்த பின்னர் தான் குழப்பமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் நளீன் பண்டாரவின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.