பிரேசிலில் ஏற்பட்ட கன மழையால் 94 பேர் பலி

By Vishnu

17 Feb, 2022 | 07:51 AM
image

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் மலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி குறைந்தது 94 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரியோ டி ஜெனிரோவின் வடக்கே மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் என்ற நகரமே தொடர் மழையால் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.

கன மழையால் நகரின் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மலைப்பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

அனர்த்தம் காரணமாக சுமார் 400 பேர் வீடுகளை இழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந் நிலையில் நகரின் மேயர் அவசர நிலையை அறிவித்துள்ளார்.

தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தேடல் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன, இதுவரை 94 இறப்புகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், 24 பேர் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பிரேசிலின் தேசிய குடிமைத் தற்காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

The scene after a mudslide in Petrópolis, Brazil on Wednesday.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right