ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீதான தாக்குதல் ; 86 சி.சி.டி.வி. கமரா தொகுதிகள் ஆராய்வு

By Vishnu

16 Feb, 2022 | 07:47 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த விசாரணைகள் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான 3 சிறப்புக் குழுக்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் இன்றைய தினம் வரை, இந்த விசாரணைகளில் சுமார் 86 சி.சி.டி.வி. கமரா தொகுதிகள் விசாரணை அதிகாரிகளால்  பரிசோதிக்கப்பட்டு அவற்றில் பதிவாகியிருந்த காட்சிகள் ஆராயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விசாரணையாளர்களின் தகவல்கள் பிரகாரம், இந்த தாக்குதலுக்கு சந்தேக நபர்கள் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்துள்ள நிலையில், இதுவரையிலான சி.சி.டி.வி. காணொளி பரிசோதனைகளின் போது, சந்தேகத்துக்கு இடமான ஸ்பேசியா ரக வேன் ஒன்று தொடர்பில் சில தடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Image

எவ்வாறாயினும் சில தெளிவற்ற சி.சி.டி.வி. காட்சிகளை, மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் உதவியுடன் தெளிவாக  பெற்று தடயங்களாக பயன்பபடுத்துவது தொடர்பில் பொலிஸாரின் கவனம் திரும்பியுள்ளது.

அதன்படி இன்றைய தினம், இது தொடர்பில் கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டு இதற்கான  உத்தரவு பெறப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

அத்துடன் இந்த விசாரணைகளில் இதுவரை 26 பேரின் வாக்கு மூலங்களை பொலிஸ் குழுக்கள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right