சுதந்திரக் கிண்ண அரை இறுதியில் 3 ஆவது அணியாக தகுதிபெற்றது கிழக்கு மாகாணம் 

Published By: Digital Desk 4

16 Feb, 2022 | 09:30 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட 3 ஆவது அணியாக கிழக்கு மாகாணம் தகுதிபெற்றுள்ளது.

கிழக்கு மாகாணஅணி

மாத்தறையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற 6ஆம் கட்ட லீக் போட்டியில் 3 - 0 என்ற கோல்கள் கணக்கில் மேல் மாகாணத்தை வெற்றிகொண்டதன் மூலம் கிழக்கு மாகாணம் 3ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் சுற்றுப் போட்டி விதிகளுக்கு அமைய 2 அணிகள் சம் புள்ளிகளைக் கொண்டிருந்தால் அந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான (ஹெட் டூ ஹெட்) போட்டியில் வெற்றி பெற்ற அணியே தரப்படுத்தலில் முன்னிலை பெறும்.

இந்த விதிகளுக்கு அமைய மேல் மாகாணம் கடைசிப் போட்டியில் வட மாகாணத்தை வெற்றிகொண்டு 10 புள்ளிகளைப் பெற்றாலும்கூட  நேருக்கு நேர் போட்டியில் மேல் மாகாணத்தை கிழக்கு மாகாணம் வெற்றிகொண்டுள்ளதால் அரை இறுதி வாய்ப்பை கிழக்கு மாகாணம், செவ்வாய்க்கிழமை போட்டி முடிவுடன் உறுதி செய்து கொண்டுள்ளதாக சம்மேளன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தென் மாகாணம்

இதன் காரணமாக அரை இறுதியில் விளையாடவுள்ள 4ஆவது அணி எது என்ற போட்டி தென் மாகாணத்துக்கும் மேல் மாகாணத்துக்கும் இடையில் நிலவுகின்றது.

கிழக்கு மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையில் நடைபெறவுளள கடைசி லீக் போட்டி வேற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் அல்லது தென் மாகாணம் வெற்றிபெற்றால் 4ஆவது அணியாக தென் மாகாண அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.

தென் மாகாணம் தோல்வி அடைந்து வட மாகாணத்தை மேல் மாகாணம் வெற்றிகொண்டால் போடப்பட்ட கொல்களின் அடிப்படையில் மேல் மாகாணம்  4ஆவது அணியாக   அரை இறுதிக்கு முன்னேறும்.

மேல் மாகாணம்

அணிகளின் தற்போதைய புள்ளிகள் நிலைவரப்படி சப்ரகமுவ மாகாணம் (14 புள்ளிகள்), வட மாகாணம் (12 புள்ளிகள்), கிழக்கு மாகாணம் (10 புள்ளிகள்) ஆகிய 3 அணிகள் அரை இறுதியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ளன.

தென் மாகாணம் (10), மேல் மாகாணம் (07) ஆகிய இரண்டு அணிகளில் கடைசி அணியாக அரை இறுதி வாய்ப்பை பெறும் அணி எது என்பது மேல் மாகாணத்துக்கும் வட மாகாணத்துக்கும் இடையிலான போட்டி, கிழக்கு மாகாணத்துக்கும் தென் மாகாணத்துக்கும் இடையிலான போட்டி ஆகியவற்றின் முடிவுகளிலேயே தங்கி இருக்கின்றது.

எனவே இந்த நான்கு போட்டிகள் சம்பந்தப்பட்ட இரண்டு போட்டிகளும் ஏக காலத்தில் நடத்தப்படுவதே சிறந்தது என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற...

2025-04-18 01:22:12
news-image

18 வயதுக்குட்பட்ட ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-18 01:18:14
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை தனது சொந்த மண்ணில்...

2025-04-18 01:14:18
news-image

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில்...

2025-04-17 03:42:47
news-image

இலங்கைக்கு இரண்டாவது வெள்ளிப் பதக்கம்: பெண்களுக்கான...

2025-04-17 03:40:20
news-image

சுப்பர் ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸை டெல்ஹி...

2025-04-17 03:38:02
news-image

பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தில் சர்ச்சை;...

2025-04-16 23:21:01
news-image

லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் விளையாட்டு...

2025-04-16 17:15:53
news-image

ஆசிய ஹொக்கி சம்மேளனக் கிண்ணம் 2025;...

2025-04-16 16:06:32
news-image

 யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க ...

2025-04-16 02:15:30
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் குறைந்த எண்ணிக்கைகள்...

2025-04-16 01:47:52
news-image

18இன் கீழ் ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்:...

2025-04-16 01:45:17