சிட்னியில் சுறா மீனின் தாக்குதலுக்குள்ளான நீச்சல் வீரர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1963 ஆம் ஆண்டுக்கு பிறகு சுறா மீனின் தாக்குதலுக்குள்ளாகி சிட்னியில் ஒருவர் உயிரிழக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடவில்லை, மேலும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தினையடுத்து லிட்டில் பே மற்றும் அருகிலுள்ள பல கடற்கரைகள் தற்சமயம் மூடப்பட்டுள்ளன.
புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 04:30 மணிக்கு (05:30 GMT) தாக்குதல் சுறா மீன் நடந்தபோது, கடற்கரை பகுதியில் டஜன் கணக்கான மக்கள் நீச்சல், துடுப்பு ஏறுதல் மற்றும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர் என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.