கொழும்பு நகரமண்டப பகுதியில் அமைந்திருக்கும் பிரபல இரவு களியாட்ட விடுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் குறித்து இணையத்தளங்களில் பரவி வருகின்ற செய்திகள்  உண்மைக்கு புரம்பானவை என அவ் இரவு களியாட்ட விடுதியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தின் போது முக்கிய அரசியல்வாதி  ஒருவரின் மகன் வருகை தந்திருந்ததாக பரவி வருகின்ற செய்திகள் பொய்யானவை என்றும் இவ்வாறான செய்திகளினால் தங்களின் நிறுவனத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தாக்குதல் இடம்பெற்றவேளையில் தானும் கடமையில் இருந்ததாகவும் அச்சமயத்தில் பிரபல அரசியல்வாதியி ஒருவரின் மகன் வரவில்லை என்று உறுதியாக கூறமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தியினை வாசிக்க :- http://www.virakesari.lk/article/12237