பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கெதிராக இரண்டு வழக்குகளை நீதிமன்றத்தில் இன்று பதிவுசெய்துள்ளார்.

நிதிமோசடி விசாரணைப் பிரிவினர் 200 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டுமெனக் கோரி குறித்த நாமல் ராஜபக்ஷ வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிதியை மோசடி செய்ததாக தெரிவித்து நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்தமைக்கு எதிராக  குறித்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.