சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி : கிழக்கு, தென் மாகாணங்கள் வெற்றி

By T. Saranya

16 Feb, 2022 | 12:13 PM
image

(என்.வீ.ஏ.)

ஒரே போட்டியில் 3 சொந்த கோல்கள் (ஓன் கோல்) உட்பட ஒரே நாளில் 7 கோல்கள் போடப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டத்தின் 6 ஆம் கட்டப் போட்டிகளில் கிழக்கு மாகாணமும் தென் மாகாணமும் மிகவும் அவசியமான வெற்றிகளை ஈட்டிக்கொண்டன.

மாத்தறையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற மேல் மாகாணத்துக்கு எதிரான போட்டியின் இரண்டாவது பகுதியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய கிழக்கு மாகாணம் 3 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

சுமித் வல்பொலவின் பயிற்றுவிப்பில்  திறமையான வீரர்கள் பலரை உள்ளடக்கிய மேல் மாகாணத்தின் அரை இறுதி வாய்ப்பு இந்தத் தோல்வியுடன் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் மொஹமத் ஹசன் றூமியின் பயிற்றுவிப்பில் திறமையாக விளையாடிவரும் கிழக்கு மாகாணம் அரை இறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கும் மேல் மாகாணத்துக்கும் இடையிலான போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன. ஆனால் இடைவேளைக்கு முன்னர் எந்த அணியும் கோல் போட்டிருக்வில்லை.

போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கிழக்கு மாகாண வீரர் எம்.டி.எம். சாஹியை முரணான வகையில் மேல் மாகாண வீரர் மொஹமத் முஷ்பிர் வீழ்த்தியபோது சாஹியின் வலது கை நிலத்தில் மோதி காயத்துக்குள்ளானார். 

இதனை அடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணத்துக்கு கிடைத்த 20 யார் தூர ப்றீ கிக் மூலம் ரிப்கான் மொஹமத் அலாதியான கோல் ஒன்றைப் போட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கிழக்கு மாகாணம் சார்பாக 85ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் எம்.எம்.எம். முஷ்தாக் மிகவும் சாமர்த்தியமாக பந்தை கோல்காப்பாளருக்கு மேலாக செலுத்தி அற்புதமான கோல் ஒன்றைப் போட்டார். இதன் மூலம் கிழக்கு மாகாணம் 2 - 0 என முன்னிலை அடைந்தது.

நான்கு நிமிடங்கள் கழித்து எதிரணியின் பெனல்டி எல்லைக்குள் மிகவும் கடினமான கோணத்திலிருந்து எம்.எம்.எம். முர்சிப் தனது இடது காலால் பந்தை உதைத்து கிழக்கு மாகாணத்தின் 3ஆவது கோலை போட்டார்.

அதன் பின்னர் மேலதிக கோல் எதுவும் போடப்படாத நிலையில் கிழக்கு மாகாணம் 3 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக பெற்றிபெற்றது.

3 சொந்த (ஓன்) கோல்கள்

காலி சர்வதேச விளையாட்டரங்கில் 3 சொந்த (ஓன்) கோல்கள் போடப்பட்ட தென் மாகாணத்துக்கும் ஊவா மாகாணத்துக்கும் இடையிலான போட்டியில் தென் மாகாணம் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் ஏ. கவிந்துவின் கோர்ணர் கிக்கை ஊவா கோல்காப்பாளர் ப்ரபாத் அருணசிறி தடுக்க முயற்சித்தபோது பந்து அவரது காலில் பட்டு அவரது சொந்த கோலினுள் புகுந்தது.

20 நிமிடங்கள் கழித்து இரண்டாவது சொந்த கோல் ஒன்று போடப்பட்டது. பிராஸ் சஹீர் இடது புறத்திலிருந்து பரிமாறிய பந்தை என். ராஜபக்ஷ வெளியில் உதைக்க முற்பட்டபோது பந்து அவரது சொந்த கோலினுள் செல்ல ஊவா மாகாணத்துக்கு இனாம் கோல் ஒன்று கிடைத்தது.

இடைவேளைமுடிந்து ஆட்டம் தொடர்ந்த போது 60ஆவது   நிமிடத்தில் தென் மாகாண விரர் சுப்புன் தனஞ்சய இடதுபுறத்திலிருந்து பரிமாறிய பந்து பின்கள வீரர் சத்துர புஷ்பகுமாரவின் காலில் பட்டு அவரது சொந்த கோலினுள்ளேயே சென்றது.

போட்டியின் 75ஆவது நிமிடத்தில் கேஷான் துமிது வலதுபுறமாக பந்தை நகர்த்திச் சென்று பெனல்டி எல்லைக்குள்ளிருந்து கோல் காப்பாளருக்கு மேலாக பந்தை செலுத்தி தென் மாகாணத்தின் 3ஆவது கோலை போட்டார்.

கடைசி 15 நிமிடங்களில் இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்ட போதிலும் மேலதிக கோல் எதுவும் போடப்படவில்லை.

இதனை அடுத்து தென் மாகாணம் 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றிகள் மூலம் கிழக்கு மாகாணம், தென் மாகாணம் ஆகிய இரண்டு அணிகளும் அரை இறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளன. அந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் இரண்டு அணிகளும் அரை இறுதிகளில் சப்ரகமுவ, வடக்கு மாகாண அணிகளுடன் இணையும்.

ஒருவேளை கிழக்கு மாகாணம் அல்லது தென் மாகாணம் தோல்வி அடைந்து மேல் மாகாணம் தனது கடைசி போட்டியில் வெற்றிபெற்றால் மேல் மாகாணத்துக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறெனின் கிழக்கு மாகாணம் அல்லது தென் மாகாணம் நிகர கோல்கள் அடிப்படையில் அரை இறுதிக்கு தெரிவாகும்.

எனவே இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள போட்டிகள் மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தீரமானம் மிக்க போட்டிகளாக அமையவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05